Latestமலேசியா

சிலாங்கூர் மாநில B40 இந்திய மாணவர்களுக்கான கல்வி உதவி நிதி ; ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலாம், ஏப்ரல் 25 – சிலாங்கூர் மாநிலத்திலுள்ள, B40 இந்திய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், மாநில அரசாங்கத்தின் மேற்கல்வி உதவி நிதிக்கு விண்ணப்பம் செய்ய வரவேற்கப்படுகின்றனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்த அல்லது பத்தாண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் இந்திய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் அந்நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

குறிப்பாக, மூவாயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவாக மாதம் வருமானம் பெரும், இந்திய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் அந்த உதவி நிதிக்கு விண்ணப்பிக்கலாம்.

அதன் வாயிலாக, நாடு முழுவதும், அரசாங்கத்தின் அங்கீகாரத்தை பெற்ற உயர்கல்விக்கூடங்களில், இளங்கலை பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டும் அதிகபட்சம் ஐயாயிரம் ரிங்கிட்டும், டிப்ளோமா பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அதிகபட்சம் மூவாயிரம் ரிங்கிட்டும் உதவித் தொகையாக வழங்கப்படும்.

சிலாங்கூர் மாநில மனிதவள, வறுமைத் துடைத்தொழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாபாராய்டு வீரமான் அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற அல்லது இணைய QR குறியீடு வாயிலாகவோ, தகுதியுள்ள மாணவர்கள் அந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

இம்மாதம் 30-ஆம் தேதி, நண்பகல் மணி 12-க்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேல் விவரங்களுக்கு, மாணவர்லள் 0355447303 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது excoofficepapparaidu@gmail.com எனும் மின்னஞசல் வாயிலாகவோ தொடர்புக் கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!