Latestமலேசியா

சிலாங்கூர் வீடுகளுக்கு அதிக வரவேற்பு

சிப்பாங், மார்ச் 12- சிலாங்கூர் வீடுகளுக்கு பொதுமக்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை வீடுகளுக்கான மனு செய்துள்ள 120,000 பேரின் பட்டியலை சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் கொண்டுள்ளது. வரும் 2025ஆம் ஆண்டுவாக்கில் 60,000 கட்டுபடி விலை வீடுகளைக் கட்டுவதற்கு மாநில அரசு நிர்ணயித்துள்ள இலக்கைக் காட்டிலும் இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாகும் என்று வீடமைப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Rodziah Ismail தெரிவித்திருக்கிறார்.

குறைவான விலையில் அதே சமயம் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ள காரணத்தால் ரூமா இடாமான் மற்றும் ஹராப்பான் வீடுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளதாக அவர் சொன்னார். இந்த பிரிவு வீடுகள் குளிசாதனம், தொலைக்காட்சி, சமையலறை கோபினட், குளிர்பதனப் பெட்டி ஆகிய வசதிகளை கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த ஈராண்டுகளில் 42,000 ரூமா இடாமான் வீடுகளை நிர்மாணிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!