தஞ்சோங் மாலிம், அக்டோபர்-19 – பேராக், சிலிம் ரிவர் அருகே கம்போங் பாருவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த 75 வயது முதியவர் நேற்று இறந்துகிடந்தார்.
சில நாட்களாகவே அவரை வெளியில் காணவில்லை என்பதால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் தகவல் கொடுத்ததை அடுத்து தீயணைப்பு-மீட்புத் துறை சம்பவ இடம் விரைந்தது.
பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்றவர்கள், முதியவரின் உடலை மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர்.