
சண்டியாகோ, பிப் 4 – சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் குறைந்தது 13 பேர் மாண்டதோடு 14,000 ஹெக்டர் காடுகளும் அழிந்தன. கடுமையான வெப்பத்தினால் காட்டுத் தீ பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிலியின் தலைநகர் சண்டியாகோவிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் Biobio வட்டாரத்தில் Santa Juana நகரில் தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 11 பேர் மாண்டதாக ஊராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அவரச நிலையின் போது உதவிச் சேவையில் ஈடுபட்ட தீயணைப்பு சேவைக்கான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஓட்டுனரும் , மெக்கனிக் ஒருவரும் மாண்டதாக விவசாய அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். நாடு முழுவதிலும் 39 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.