
சன்டியாகோ, மார்ச் 9 – சிலி அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் விமான ஊழியர் ஒருவர் உட்பட இருவர் மாண்டனர். இந்த சம்பவத்தில் மாண்ட மற்றொரு நபர் கொள்ளையர்களில் ஒருவன் என அடையாளம் காணப்பட்டது . விமான நிலையத்தின் சரக்குப் பகுதியில் 32.5 மில்லியன் அமெரிக்க டாலர் ரொக்கத்தை பாதுகாப்பு ஆயுத வசதி கொண்ட டிரக் ஒன்றில் ஊழியர்கள் ஏற்றிக்கொண்டிருந்தபோது திடீரென மூன்று வாகனங்களில் வந்த 12 க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் அப்பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியின்போது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அமெரிக்காவின் மியாமியிலிருந்து அந்த பணம் சிலியின் சன்டியாகோவிலுள்ள அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தபோது அந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.