சிவகாசி, மே 10 -இந்தியா, தமிழகம், சிவகாசி அருகேயுள்ள, பட்டாசு ஆலை ஒன்றில் நேற்று ஏற்பட்ட பயங்கரமான வெடி விபத்தில், ஆறு பெண்கள் உட்பட குறைந்தது பத்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த இதர 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sengamalapattiயில் அமைந்துள்ள அந்த பட்டாசு ஆலையில், மொத்தம் எண்பதுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
உள்நாட்டு நேரப்படி, நேற்று பிற்பகல் மணி இரண்டு வாக்கில், ஆடம்பர வானவேடிக்கையை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு திடீரென வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனால், அந்த தொழிற்சாலையின் பெரும்பாலான பகுதி தீயில் அழிந்தது. அதோடு, அந்த தீ அருகிலுள்ள, மற்றொரு தொழிற்சாலைக்கும் பரவியதாக கூறப்படுகிறது.
எனினும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.