Latestமலேசியாவிளையாட்டு

சிவசங்கரி குணமடைய 3 மாதங்கள் ஆகும்; ஃபைசால் அசுமு

புத்ராஜெயா, ஜூன் 27- அடுத்த மாத இறுதியில் தொடங்கும் Birmingham காமன்வெல்த் போட்டியில் , மலேசியாவைப் பிரதிநிதித்து ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி கலந்து கொள்ளமாட்டார் எனும் தகவலை இளைஞர் விளையாட்டு அமைச்சர் Datuk Seri Ahmad Faizal Azumu உறுதிப்படுத்தினார்.

புத்ராஜெயாவில் சிகிச்சை பெற்றுவரும் சிவசங்கரியை நேரில் சென்று சந்தித்தப் பின்னர் , அமைச்சர் அதனை தெரிவித்தார். இவ்வேளையில், சிவசங்கரி விரைவில் குணமடைய அனைத்து வித ஆதரவினையும் இளைஞர் விளையாட்டு அமைச்சும் தேசிய விளையாட்டு மன்றமும் வழங்குமென அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, நேற்று நிகழ்ந்த விபத்தில் சிவசங்கரிக்கு, முகத்திலும், முதுகெலும்பிலும் காயங்கள் ஏற்பட்டதாக புத்ராஜெயா மருத்துவமனையின் துணை இயக்குநர் Dr. Khairol Anwar தெரிவித்தார்.
தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும் அந்த இளம் விளையாட்டாளர் , தமது காயங்களில் இருந்து குணமடைய 3 மாதங்களாவது ஆகுமென அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!