பனையூர், ஆகஸ்ட் 22 – தமிழக வெற்றி கழகத்தின் கட்சிக் கொடியை, அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்துள்ளார்.
கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறப் பின்னணியில் இரண்டு போர் யானைகளுக்கு நடுவே வாகை மலரும் உள்ளவாறு அமைந்துள்ளது.
கட்சியின் தலைவர் விஜய் அக்கொடியை அறிமுகம் செய்து ஏற்றி வைத்ததோடு, ‘தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பிறக்கது’ எனத் தொடங்கும் கட்சியின் கொள்கை பாடலையும் வெளியிட்டுள்ளார்.
தாய்மொழி தமிழை காக்கவும், சமூகநீதி வழியில் பயணிப்போம் எனவும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டு தமிழகம் இனி சிறக்கும்; வெற்றி நிச்சயம், என பெரு மகிழ்வுடன் கூறியிருக்கிறார் விஜய்.
Video
இந்த கொடிக்கான அர்த்தம் மற்றும் கொள்கைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் விஜய் கூறியுள்ளார்.