ஜகார்த்தா, பிப் 4 – தனது மனைவி சீனப் புத்தாண்டுக்கு வேலை செய்ய வேண்டியிருந்த காரணத்தால், இந்தோனேசியா , Pekanbaru-வில் ஆடவன் ஒருவன், மனைவி வேலை செய்யும் அலுவலகத்திற்கு தீ வைத்துள்ளான்.
சம்பந்தப்பட்ட ஆடவன் , சீனப் புத்தாண்டு விடுமுறையன்று தனது மனைவி வேலை செய்யும் மாவட்ட மேம்பாட்டு திட்டமிடல் நிறுவனத்திற்குள் அத்து மீறி நுழைந்திருக்கின்றான்.
அப்போது, அந்த அலுவலகத்தில் தனது மனைவி இல்லாததைக் கண்டு , அலுவலகத்தில் உள்ள Sofa நாற்காலிக்கு தீ வைத்து விட்டு தப்பித்து ஓடியதாக, Pekanbaru போலிஸ் தலைவர் தெரிவித்தார்.