கோலாலம்பூர், பிப் 2 – தாமான் இந்தானில் உள்ள 4 குடும்பங்களின் வீடுகள் தீயில் அழிந்ததைத் தொடர்ந்து அவர்களது சீனப் புத்தாண்டு மகிழ்ச்சி சோகமாகியது. பெருநாளுக்காக வாங்கிய புதிய தளவாடச் சாமன்கள் மற்றும் காரும் தீயில் அழிந்ததாக 60 வயதுடைய Kao Huan Yong தெரிவித்தார். நண்பகல் மணி 12 .30 அளவில் நிகழ்ந்த அந்த தீ விபத்தில் தமது தாயார், சகோதரர் மற்றும் உறவினரின் இரண்டு பிள்ளைகள் உயிர் தப்பியதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த தீ விபத்தின்போது ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் காயத்தினால் ஒரு தம்பதியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக சுங்கை பட்டாணி மண்டல தீயணைப்பு அதிகாரி சோபிரின் அப்துல் காதீர் தெரிவித்தார். 70 வயதுடைய ஆடவர் காலில் 5 விழுக்காடு தீக்காயத்திற்கு உள்ளானார். அவரது 52 வயது மனைவி சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினர். அவர்கள் இருவரின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த தீ விபத்தில் மூன்று வீடுகள் 90 விழுக்காடு சேதம் அடைந்தன. இதர இரண்டு வீடுகள் 10 விழுக்காடு பாதிக்கப்பட்டதாக சோபிரின் அப்துல் காதீர் கூறினார்.