கோலாலம்பூர், பிப் 4 – பகாங்கில் சீனப் புத்தாண்டு தினத்தை கொண்டாடிய சீனக் குடும்பத்தில் கிள்ளானிலிருந்து திரும்பிய குடும்ப உறுப்பினரால் கோவிட் தொற்று பரவியதைத் தொடர்ந்து அவர்களது வயதான பெற்றோரில் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது பெற்றோரைப் பார்க்க வந்த குடும்ப உறுப்பினர் கோவிட் சுய பரிசோதனையை மேற்கொள்ளத் தவறியதால் இந்த நிலைமை ஏற்பட்டதாக Pahang சுகாதார இயக்குனர் DR . Nor Azimi Yunus தெரிவித்தார். சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர் கோலாலம்பூருக்கு திரும்பிய இரண்டு நாட்களுக்குப் பின் அவரது பெற்றோரில் ஒருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளானார். தொற்று உறுதிப்பட்ட மறுநாளில் பெற்றோரில் ஒருவர் அவரது அறையிலேயே இறந்து கிடந்தார் என தமது முகநூலில் வெளியிட்ட பதிவில் டாக்டர் Nor Azimi Yunus தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்5 hours ago