
செப்பாங், ஜன 6 – சீனப் பெருநாளை முன்னிட்டு, உள்நாட்டுக்கான கூடுதல் 291 விமான பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெருநாள் காலத்தில் விமான பயண டிக்கெட்டுக்கான விலை அதிகரிப்பை தடுக்கும் முயற்சியாக, கூடுதல் பயணச் சேவைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
ஜனவரி 18 -ஆம் தேதியிலிருந்து ஜனவரி 31-ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும் அந்த கூடுதல் விமான பயணங்களுக்கான போக்குவரத்து சேவையை, AirAsia, Batik Air, Malaysian Airlines, MyAirline , SKS Airways முதலிய நிறுவனங்கள் ஏற்படுத்தி தருமென அமைச்சர் கூறினார்.