Latestஉலகம்

சீனாவின் உடைந்த ராக்கெட்டின் பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் விழுந்தன

பெய்ஜிங், மே 9 – சீனா ஏவிய Long March 5B ராக்கெட்டின் சிதறிய  பாகங்கள், இந்தியப் பெருங்கடலில் விழுந்திருப்பதாக, அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது. அந்த பாகங்கள் மாலத்தீவின் அருகேயுள்ள நீரிணைப் பகுதியில் விழுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அந்நாட்டின் உள்நாட்டு நேரப்படி இன்று காலை மணி  10. 24 –க்கு, உடைந்த ராக்கெட்டின் பாகங்கள் பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழைந்து  கடலுக்குள் விழுந்ததாக அந்த மையம் கூறியது.

ராக்கெட்டின் பாகங்கள் பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழைவதற்கு முன்பாகாவே சுக்கு நூறாகி நொறுங்கிவிட்டன.

சம்பந்தப்பட்ட ராக்கெட் கடந்த ஏப்ரல் 29 -ஆம் தேதி புதிய விண்வெளி தளத்தை  விண்ணுக்கு ஏந்தி சென்றது. எரிவாயு முடிந்த பின்னர் , விண்ணில் அந்த  ராக்கெட் கட்டுப்பாடின்றி சுற்றியது.

வழக்கமாக, விண்ணுக்கு துணைக் கோளம் அல்லது இதர பொருட்களை எடுத்துச் செல்லும் ரக்கெட்டுகள், மிக கட்டுப்பாட்டுடன் மீண்டும்  பூமியில் கடல் பகுதிக்குள் விழ வைக்கப்படும்

ஆனால், சீனாவின் ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்ததால் , பூமியில், அது எங்கு விழக்கூடுமென அச்சம் எழுந்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!