
சீனாவின், சோதனை விண்கலன் ஒன்று, 276 நாட்களுக்கு பின் இன்று பூமிக்கு திரும்பியது.
பூமியின் வட்ட பாதையில் சுற்றிக்கு கொண்டிருந்த அந்த விண்கலன் பணியை முடிந்துக் கொண்டு, அட்டவணையிடப்படி இன்று பூமிக்கு திரும்பியதாக, சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீன விண்வெளி தொழில்நுட்பத்தை சோதனை செய்ய ஏதுவாக பாய்ச்சப்பட்டதாக கூறப்படும் அந்த விண்கலம், சீன விண்வெளி துறையின் மகத்தான வெற்றியாக கருதப்படுகிறது.
எனினும், 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் பாய்ச்சப்பட்ட அந்த விண்கலம் குறித்த தகவல், அது பயன்படுத்திய தொழில்நுட்பம், எவ்வளவு தூரத்திற்கு அது பயணித்தது என்பது போன்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
குறிப்பாக, அந்த விண்கலத்தின் உருவப்படம் கூட இதுவரை பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டதில்லை என கூறப்படுகிறது.