Latestசிங்கப்பூர்
சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து நன்கொடை பெட்டிகளை திருடிய மூவருக்கு சிறை

சிங்கப்பூர், நவ 3 – நன்கொடைப் பெட்டிகளில் இருந்து திருடுவது எப்படி என்பதை சமூக ஊடகங்களில் கற்றுக்கொண்ட சீனாவைச் சேர்ந்த மூவர் அதனை சிங்கப்பூரில் செயல்படுத்தியபோது கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பிடிபடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சிங்கப்பூரில் ஆறு வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து, நன்கொடை பெட்டிகளில் இருந்து S$1,000 சிங்கப்பூர் டாலரை கொள்ளையிட்டனர். 32 வயது, 29 வயது மற்றும் 38 வயதுடை அந்த மூன்று நபர்களுக்கும் தலா ஏழு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மூவரும் தங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் கோ 7 மாத கால சிறைத் தண்டனையை விதித்தார்.