Latestஉலகம்

சீனாவில் ஒரே குடியிருப்பு பகுதிகளில் கணவருக்கு 4 காதலிகள்; மனைவி அதிர்ச்சி

பெய்ஜிங், நவ 6 – சீனாவில் ஆடவர் ஒருவர்  பெரிய பணக்காரர்போல் நடித்து தான் குடியிருக்கும்  வீடமைப்பு பகுதியில்  நான்கு காதாலிகளை வைத்திருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அவரது மனைவி பெரும் அதிச்சிக்கு உள்ளாகியுள்ளார். 

 இந்த காதலிகளில் ஒருவர்  தனது மனைவி இருக்கும் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வருவதாக South China Morning Post  பத்திரிகை தகவல் வெளியிட்டது.  தனது நண்பர்களில் எவருக்கும்கூட  தெரியாமல் நான்கு ஆண்டுகளாக  இந்த விவகாரத்தை அந்த நபர் ரகசியமாக வைத்திருந்தார். 

ஸியாஜூன் (Xiaojun) என்று அடையாளம் கூறப்பட்ட  அந்த ஆடவரின்  வயது குறித்து தகவல் எதுவும்  வெளியிடப்படவில்லை. எனினும் பல பெண்களை கவரக்கூடிய வகையில் அவர் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததோடு  தாம் காதலிக்கும் பெண்களுக்கு   ஒன்லைனில் விதவிதமான  பொருட்களை வாங்கி கொடுப்பதால்  அவரது வலையில்   பலர்  விழுந்ததாக  தெரிகிறது.   

ஆகக்கடைசியாக தனது புதிய காதலிக்கு   ஒரு பேக் நிறைய வழங்கப்பட்ட பண நோட்டுக்கள் போலியானவை என  தெரியவந்ததைத் தொடர்ந்து அப்பெண் ஆத்திரம் அடைந்து போலீசில் புகார் கொடுத்ததால் அந்நபர்  கைது செய்யப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!