Latestஉலகம்

சீனாவில், நவீன கழிவறை தொட்டியில் தீ; பயன்படுத்திக் கொண்டிருந்த ஆடவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்

பெய்ஜிங், நவம்பர் 30 – சீனாவில், நவீன கழிவறை தொட்டி ஒன்று திடீரென தீப்பிடித்து வெடித்தது.

எனினும், சம்பவத்தின் போது அதனை பயன்படுத்திக் கொண்டிருந்த ஆடவர் ஒருவர் காயம் எதுவும் இன்றி அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.

நவம்பர் பத்தாம் தேதி, பூஜியான் மாநிலத்தில் நிகழ்ந்த அச்சம்பவத்தை அவ்வாடவரே பதிவுச் செய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த கழுவறை தொட்டியை பயன்படுத்த தொடங்கியதும், அதிலிருந்து புகை கிளம்ப ஆரம்பித்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.

புகை மோசமானதும், அந்த தொட்டியிலிருந்து தாம் எழுந்து விட்டதாகவும், அதன் பின்னர் அதில் தீ ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நவீன கழிவறை தொட்டியில் தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், மின்சார கோளாறு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!