பெய்ஜிங், மே 2 – சீனாவின் தென் பகுதியில் Guangdon வட்டாரத்தில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது 36 பேர் மரணம் அடைந்தனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை மணி 2.10 அளவில் Guangdong வட்டாரத்தில் Meizhou நகருக்கும் Dabu பகுதிக்குமிடையிலான நெடுஞ்சாலையில் இடிந்ததாக Xinhua செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. அந்த சம்பவத்தில் 20 வாகனங்களில் சிக்கிக்கொண்டதாகவும் 54 பேர் மாண்டதாகவும் தொடக்கக் கட்ட தகவல்கள் தெரிவித்தன.
விடியற்காலை மணி 5.30 வரை 36 பேர் உயிரிழந்தது உறுதியானது. காயம் அடைந்தவர்களில் 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இடிந்து விழுந்த சாலைப் பகுதியில் அவசர பணிக்கான வாகனங்களும் Cranes களும் காணப்படும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. தொடர்ச்சியாக பெய்த கடுமையான மழையினால் நிலவியல் அமைப்பில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக CCTV நிறுவனம் தகவல் வெளியிட்டது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.