சீனா, ஆகஸ்ட் 13 – சீனாவைச் சேர்ந்த லீ முசி என்ற 13 வயது பள்ளி மாணவி சீனாவில் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை சாதனை படைத்துள்ளார்.
டில்லியில் 1999ஆம் ஆண்டு அரங்கேற்றம் நடத்திய சீனாவைச் சேர்ந்த பிரபல பரதநாட்டிய கலைஞரான ஜின் ஷான் (Jin Shan) நடத்தி வரும் பரதநாட்டிய பள்ளியில்தான், 10 ஆண்டுகளுக்கும் மேலாக லீ முசி பரதநாட்டியம் கற்று வருகிறார்.
அவரின் வழிகாட்டுதலுடன், பெய்ஜீங்கில் நடைபெற்ற லீ முசியின் இரண்டு மணிநேர அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு, சென்னையில் இருந்து விமானம் மூலம் இசைக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.
தென்னிந்தியாவைச் சேர்ந்த பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், சீன மாணவியால், சீன ஆசிரியர் கொண்டு, சீனாவில் அரங்கேற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
எனவே, இது பரதநாட்டியத்தில் ஒரு புதிய மைல்கல் மட்டுமல்லாது ஒரு வரலாற்றுத் தருணமாகவும் பார்க்கப்படுகிறது.