
புத்ராஜெயா, ஜன 3 – சீனாவில் பரவியிருக்கும் BA.5.2 மற்றும் BF. 7 இரு கோவிட் – 19 வைரஸ்களும் , மலேசியாவில் கடந்தாண்டு மார்ச் , ஆகஸ்ட் மாதங்கள் முதலே கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக , சுகதார தலைமை இயக்குநர் Tan Sri Dr. Noor Hisham Abdullah தெரிவித்தார். நாட்டில் BA.5.2 வைரஸ்-சால் கடந்த மார்ச் 16- ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31 -ஆம் தேதி வரை , 4,152 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இவ்வேளையில், அந்த வகையிலான வைரஸ் தொற்று , தற்போது உலகம் முழுவதும் குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, BF.7 வகை வைரஸ்- சால் கடந்த டிசம்பர் வரையில், நாட்டில் 3 தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவானதாக அவர் தெரிவித்தார். எனினும், அவ்விரு கோவிட் -19 வைரஸ் வகைகளும், நாட்டில் தொற்று அதிகமாவதற்கும் , பாதிப்பு கடுமையாவதற்கும் காரணமாக அமையவில்லை என நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.