
பெய்ஜிங், மே 27- புதிய கோவிட்-19 வைரஸ் சீனாவைத் தாக்கியுள்ள நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்குமாறு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜூன் மாத இறுதிவாக்கில் இந்நோய்த் தொற்றுப் பரவல் வாரத்திற்கு 6 கோடியே 50 லட்சமாக உயரும் சாத்தியமுள்ளதாக சீனாவின் தொற்று நோயியல் நிபுணர் ஸோங் நான்ஷான் கூறியுள்ளார். சீனாவின் 140 கோடி மக்கள் தொகையில் 80 முதல் 90 விழுக்காடு வரையிலானோர் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரியில் ஏற்பட்ட நோய்ப்பரவலின் போது பாதிக்கப்பட்டதோடு அவர்கள் மத்தியில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.