
பெய்ஜிங், மே 2 – தற்போது மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சி இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது சீனாவுக்குப் பெரும் கவலையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறைந்துவரும் மக்கள் தொகை விவகாரத்தைக் கையாள சீன அரசாங்கம் அந்நாட்டு பெண்களுக்காக பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அதிரடியாக அறிவித்துள்ளது.
அவற்றில் திருமண பந்தத்தில் இணைய விரும்பாத பெண்களும் வாடகை தாய்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செயற்கை கரு வசதியுடன் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என்றும் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. கூடுதல் பிள்ளைகளை பெற்றுக்கொள்வோருக்கு வரிச் சலுகை, நீண்ட நாள் பிரசவ விடுமுறை, வீடுகளுக்கான உதவி நிதி ஆகியவற்றையும் வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன்வந்துள்ளது.