பெய்ஜிங், ஆகஸ்ட் -27 – புத்தம் புதிய மலேசிய டுரியான் பழங்கள், சீனாவின் 6 மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறைக் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.
நேற்று முதல் சீன சந்தைகளில் அவை கிடைப்பதாக, அந்நாட்டுக்கான மலேசியத் தூதர் டத்தோ நோர்மான் முஹமட் (Datuk Norman Muhamad) பெருமையுடன் தெரிவித்தார்.
புத்தம் புதிய டுரியான் பழங்களின் ஏற்றுமதிக்கு சீன சுங்கத் துறை ஜூன் மாத மத்தியில் அனுமதி வழங்கியது.
சீனாவுக்கு ஏற்றுமதியான டுரியான்கள், உணவு தரக் கட்டுப்பாட்டு அம்சங்களை கடுமையாகப் பின்பற்றியிருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
மலேசியா இதற்கு முன்பு, டுரியான்களை உறைந்த முழு பழங்களாகவும் (frozen whole fruit), விவசாய உணவுப் பொருட்கள் வடிவிலுமே சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.
உலகளவில் மலேசியாவின் டுரியான் ஏற்றுமதி ஆக அதிகமாக 2022-ஆம் ஆண்டில் 114 கோடி ரிங்கிட்டாகப் பதிவானது குறிப்பிடத்தக்கது.