Latestஉலகம்

சீனாவில் 100க்கும் மேற்பட்ட பாம்புகளை காற்சட்டைக்குள் ஒளிவைத்து கடத்தல் முயற்சி – ஆடவன் கைது

பெய்ஜிங், ஜூலை 11 – ஹங்காங்கிலிருந்து Shenzhen எல்லை நகரிலிருந்து 100 க்கும் மேற்பட்ட பாம்புகளை தனது காற்சட்டையில் மறைத்துவைத்துக்கொண்டு சீனாவுக்குள் கடத்த முயன்ற ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். பெயர் தெரிவிக்கப்படாத அந்த பயணி சீனாவுக்குள் ஊடுருவிச் செல்ல முயன்ற்போது தடுக்கப்பட்டதாக சீன சுங்க அதிகாரி ஒருவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். அந்த ஆடவனின் காற்சட்டை பேக்கேட்டில் சீல் செய்யப்பட்ட ஆறு பொட்டலங்களில் அந்த பாம்புகள் இருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். ஒவ்வொரு பொட்டலத்திலும் பல்வேறு அளவுகளிலும் வர்ணங்களிலும் பல பாம்புகள் இருந்ததாக கூறப்பட்டது. அபுர்வ வகைகள் உட்பட மொத்தம் 104 பாம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டதோடு இரண்டு எல்லை அதிகாரிகள் வெளியிட்ட காணொளியில் சிவப்பு, செந்நிறம் மற்றும் வெள்ளை நிறத்திலும் பாம்புகள் நெளிந்துக்கொண்டிருந்ததை காணமுடிந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!