Latestஉலகம்மலேசியா

சீனாவில் 24 மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்த 40 டன் உறையவைக்கப்படாத புத்தம் புதிய மலேசிய டுரியான்கள்

பெய்ஜிங், அக்டோபர்-5- சீனாவுக்கு ஏற்றுமதியான புத்தம் புதிய மலேசிய டுரியான்கள் 24 மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

முதல் குழுவாக அனுப்பப்பட்ட 40 டன் டுரியான் பழங்களும், ஆகஸ்ட் 26 முதல் பெய்ஜிங், ஷங்காய் உட்பட அந்நாட்டின் 6 பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை மையங்களில் விற்பனைக்கு வந்தன.

புத்தம் புதிய மலேசிய டுரியான்களின் உயர் தரமான சுவை சீன நாட்டு மக்களைப் பெரிதும் கவர்ந்ததால், அறிமுக நாளிலேயே அவையனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக சீனாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ நோர்மான் முஹமட் (Datuk Norman Muhamad) தெரிவித்தார்.

இந்த அபரிமிதமான வரவேற்பை அடுத்து, சீனாவுக்கான டுரியான் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க மலேசியா பரிந்துரைத்துள்ளது.

ஆனால் புத்தம் புதிய டுரியான்களை ஏற்றுமதி செய்வதென்பது அவ்வளவு எளிதல்ல; 36 மணி நேரங்களுக்குள் விற்கப்பட வேண்டும், இல்லையென்றால் அவை கெட்டுப் போக வாய்ப்பிருப்பதாக அவர் சொன்னார்.

Musang King, Black Thorn, D24 போன்ற பிரீமியம் தரம் வாய்ந்த புத்தம் புதிய டுரியான்களை கடந்த ஆகஸ்ட் மாதம் மலேசியா முதன் முறையாக சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது..

மலேசியா இதற்கு முன்பு, டுரியான்களை உறைந்த முழு பழங்களாகவும் (frozen whole fruit), விவசாய உணவுப் பொருட்கள் வடிவிலுமே சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!