பெய்ஜிங், மே-12 – You Tube-பில் அதிக Views-க்கு ஆசைப்பட்ட ஆடவர் கடைசியில் சிறை சென்ற சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.
Wang எனும் அவ்விளைஞன், தனது You Tube நேரலை வீடியோக்களின் Views-களை அதிகப்படுத்த யாரும் யோசிக்காத வகையில் நூதன முறையில் தந்திரத்தைக் கையாண்டுள்ளான்.
அதாவது, 4,000 மேற்பட்ட கைப்பேசிகளையும், VPN மென்பொருட்களையும் வாங்கி அவனே போலியாக Likes-களையும் Comment-டுகளையும் பதிவிட்டு வந்துள்ளான்.
அப்படித் தனக்குத் தானே Likes-களைப் போட்டுக் கொண்டு Views-களை அதிகரித்துக் கொண்டதில், வெறும் நான்கே மாதங்களில் சுமார் 4 லட்சத்து 15 ஆயிரம் டாலர் வருமானத்தை Wang ஈட்டியுள்ளான்.
கடைசியில் குட்டு அம்பலமாகி, அவனுக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனையும் 6,900 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Livestreaming ஏமாற்று வேலைக்காக ஒருவர் சிறை செல்லது அங்கு இதுவே முதன் முறை என்றும் கூறப்படுகிறது.