Latestமலேசியா

சீன சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்குள் நுழைவதை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் -மாட்டா கோரிக்கை

கோலாலம்பூர், டிச 30 – சீனாவில் கோவிட்-19 தொற்று குறையும்வரை அந்நாட்டைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டுமென MATA எனப்படும் மலேசிய சுற்றுலா நிறுவனங்களின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் அண்மைய சில நாட்களாக கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் மரபணு மாற்றம் கண்ட புதிய தொற்று பரவும் என மலேசிய மக்களிடையே குறிப்பாக சுற்றுலா தொழில் துறையைச் சேர்ந்தவர்களிடையே அச்சம் எழுந்துள்ளதாக Matta வின் தலைவர் டத்தோ டாக்டர் Mohd Khalid Harun தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே சுற்றுலாத்துறை மோசமாக பாதிக்கப்ட்டுள்ளது. சீன சுற்றுப்பயணிகளுக்கு எதிராக பல நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் கோவிட் தொற்று மலேசியாவில் பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கோண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!