
கோலாலம்பூர், நவ 19 – பாரம்பரிய சீன மூலிகையை விற்பனை செய்துவரும் நிறுவனம் பொறுப்பற்ற முறையில் சந்தை வியூகமாக தனது புகைப்படத்தை பயன்படுத்தியிருப்பதை சுகாதாரத்துறையின் முன்னாள் தலைமை செயலாளர்டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா சாடியதோடு அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மூலிகை தேயிலை தொடர்பாக பத்திரிகை ஒன்றில் வெளிவந்திருந்த கட்டுரையில் தமது புகைப்படம் இடம் பெற்றிருப்பதை அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது வெட்கப்படக்கூடிய ஒரு செயல் என்பதோடு கூங் வோ தோங் (Koong Woh Tong) என்ற பாரம்பரிய சீன மூலிகை நிறுவனத்திற்கு எதராக வழக்கு தொடுப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லை என டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் தாம் வெற்றி பெற்றால் அதன் மூலம் கிடைக்கும் இழப்பீட்டு தொகையை அரசு சார்பற்ற இயக்கங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போவதாக அவர் கூறியிருக்கிறார்.