Latestமலேசியா

சீ போட்டி தங்கப் பதக்க இலக்கை மலேசியா நிறைவு செய்தது பிரதமர் பாராட்டு

கோலாலம்பூர், மே 21 – வியட்னாமில் நடைபெற்றுவரும் 31-ஆவது சீ விளையாட்டுப் போட்டியில் 36 தங்கப் பதக்கங்களை வென்ற மலேசிய விளையாட்டாளர்களுக்கு பிரதமர் Ismail Sabri Yaakob தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மலேசிய குடும்ப விளையாட்டாளர்களின் சாதனைகள் பெருமையை ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். 36 தங்கப் பதக்கத்தை பெறும் மலேசியாவின் இலக்கு நாட்டின் கராத்தே குழுவின் மூலம் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்தார். மலேசிய போட்டியாளர்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை இஸ்மாயில் சப்ரி தெரிவித்துக் கொண்டார்.

நாட்டிற்கு பதக்கம் பெறமுடியாமல் போன விளையாட்டாளர்களுக்கு ஒரு குடும்பம் என்ற முறையில் அவர்களுக்கு எப்போதும் ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். நேற்றிரவு S. Prem Kumar. Sureeya Sangkar மற்றும் R .Sharmendran அகியோரைக் கொண்ட மலேசிய கராத்தே குழுவினர் 3-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசிய குழுவினரை வீழ்த்தி மலேசியாவுக்கான 36-ஆவது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!