ஜோர்ஜியா, மார்ச் 2 – சிறு பிள்ளைகளுக்கு வழக்கமாக முடி மிருதுவாகவே இருக்கும். அதை வாரிச் சீவ பெற்றோருக்கு அதிக சிரமம் இருக்காது. ஆனால், அமெரிக்கா ஜோர்ஜியாவைச் சேர்ந்த சிறுவனின் தலை முடியை வாரி படியவே வைக்க முடியாது.
மேல் நோக்கி வளர்ந்திருக்கும் அச்சிறுவனின் தலைமுடி எப்போதும் நோராக நிற்கும். பின்னர் அவரது தாயார் Katelyn Samples தோல் நிபுணரை அணுகியபோது, அவருக்கு வார முடியாத தலைமுடி பிரச்சனை இருப்பது தெரிய வந்தது.
இது மரபியல் சார்ந்த பிரச்சனையாகும். மருத்துவ ஆய்வில் இதுவரை, அதுபோன்ற தலைமுடி பிரச்சனை 10 பேருக்கு மட்டுமே இருந்துள்ளது.