சீ காற்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் மலேசியாவுக்கு மிகப் பெரிய வெற்றி

நொம் பென், மே 4 – சீ போட்டியில் மலேசியாவின் 22 வயதுக்குட்பட்ட Harimau Muda தேசிய காற்பந்துக்கு குழுவினர் பி பிரிவுக்கான முதல் ஆட்டத்தில் 5 -1 என்ற கோல் கணக்கில் Laos ( லாவோஸ் ) அணியை வீழ்த்தினர். இந்த ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்திலேயே மலேசிய குழுவின் ubaidullah Shamsul Fazilli முதல் கோலை அடித்து லாவோஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். எனினும் 21 ஆவது நிமிடத்தில் Ubaidullah பந்தை கிளியர் செய்தபோது புகுந்த சொந்த கோலினால் நிலைமை 1 – 1 என்றானது. 28 ஆவது நிமிடத்தில் லாவோஸ் ஆட்டக்காரர் அடித்த சொந்த கோலினால் மலேசியா 2 – 1 என்ற கோல் கணக்கில் முற்பகுதி ஆட்டத்தில் முன்னணியில் இருந்தது.
பிற்பகுதி ஆட்டத்தில் மலேசிய குழுவினர் சுறுசுறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து மேலும் மூன்று கோல்களை அடித்ததால் இந்த ஆட்டத்தில் 5 – 1 என்ற கோல் கணக்கில் மலேசியா வெற்றி பெற்றது. பயிற்சியாளர் E. இளவரசன் தலைமையிலான மலேசியா குழுவினர் மே 6 ஆம் தேதி தாய்லாந்துடன் இரண்டாவது ஆட்டத்தில் மோதவிருக்கின்றனர்.