
நொம்பென், மே 9- சீ விளையாட்டின் காற்பந்துப் போட்டியில் அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெறும் மலேசியாவின் கனவு சிதைந்தது.
நேற்றிரவு பி பிரிவுக்கான மூன்றாவது ஆட்டத்தில் வியட்னாம் குழுவுடன் 2 -1 என்ற கோல் கணக்கில் மலேசியாவின் Harimau Muda அணி தோல்வி கண்டதன் மூலம் அரையிறுதி ஆட்ட வாய்ப்பை மலேசியா இழந்துள்ளது.
இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் வியாட்னாம் அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றிருக்கிறது.
இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் தாய்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் லாவோஸ் குழுவை வென்றதன் மூலம் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.