Latestஉலகம்விளையாட்டு
சீ பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் தங்கப் பதக்க கனவு கலைந்தது

நொம் பென் , மே 16 – சீ விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் தங்கப் பதக்கம் பெறும் மலேசியாவின் கடைசி கனவு சிதைந்தது. இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவுக்கான இறுதியாட்டத்தில் மலேசியவின் Yap Roy King – Cheng Su Yin ஜோடி 22 -20, 21 -16 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியாவின் Rehan Naufal -Lisa Ayu Kusumawti ஜோடியிடம் தோல்வி கண்டதால் பேட்மிண்டன் போட்டியின் மூலம் ஒரு தங்கப் பதக்கத்தையாவது பெறும் மலேசியாவின் கனவு தரைமட்டமானது.