Latestமலேசியாவிளையாட்டு
சீ போட்டியில் முக்குளிப்பு வீராங்கனை பண்டெலெலா பங்கேற்கமாட்டார்

கோலாலம்பூர், ஜன 5 – இவ்வாண்டு மே மாதம் கம்போடியாவில் நடைபெறும் சீ போட்டியில் தேசிய முக்குளிப் வீராங்கனைகளான Pandelela Rinong , Nur Dhabitah ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக இளம் முக்குளிப்பு வீராங்கனைகள் சீ போட்டியில் பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். இளம் முக்குளிப்பு வீராங்கனைகள் அனைத்துலக போட்டிகளில் கலந்துகொண்டு அனுபவம் பெறுவதற்காக அவர்கள் சீ போட்டியில் பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக தேசிய முக்குளிப்பு துணைப் பயிற்சியாளர் டத்தோ Leong Mun Yee தெரிவித்திருக்கிறார். சீ போட்டிக்கான தேசிய முக்குளிப்பு வீராங்கனைகள் நேற்று முதல் பயிற்சியை தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.