
கோலாலம்பூர், மே 10 – கம்போடியாவில் நடைபெற்றுவரும் சீ போட்டியில் திங்கட்கிழமையன்று பிலிப்பின்ஸ் அணியிடம் 3- 0 என்ற ஆட்டக் கணக்கில் தேசிய மகளிர் குழு தோல்வி கண்டதைத் தொடர்ந்து மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் உயர் திறன் மையத்தின் தலைமை செயல் அதிகாரி பதவி விலகியுள்ளார்.
மலேசிய விளையாட்டாளர்களின் அண்மைய அந்த மோசமான அடைவு நிலைக்கு முழு பொறுப்பு ஏற்றுக்கொண்டு மலேசிய பேட்மிண்டன் அகெடெமியின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக Michelle Chai கடிதம் சமர்ப்பித்துள்ளார்.
இதனை மலேசிய பேட்மிண்டன் சங்கம் தனது முகநூலில் தெரிவித்துள்ளது. மேலும் உயர் திறன் இயக்குனர் பதவியிலிருந்த Tim Jonesசும் உடனடியாக விலகிக்கெண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.