Latestமலேசியா

சீ போட்டியில் 4ஆவது முறையாக ஷர்மேந்திரன் தங்கம் வென்று சாதனை

நொம்பென் ,மே 8 – சீ போட்டியில் 75 கிலோகிரேமிற்கு குறைந்த பிரிவில் தேசிய கராத்தே வீரரான ஷர்மேந்திரன் நான்கவாது முறையாக தங்கப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

அவர் இறுதிச்சுற்றில் கம்போடியாவின் Sot Panithடை 6க்கு 5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்த தங்கப் பதக்கத்தை தன்வசமாக்கிக் கொண்டார்.

2017 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற சீ போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றது முதல் தொடர்ந்து நான்காவது முறையாக 75 கிலோகிரேமிற்கும் ம் குறைந்த பிரிவில் Sharmedran தங்கப் பதக்கதை தற்காத்துக் வருகின்றார்.

இன்று நடைபெறும் ஆண்கள் குமித்தே குழு பிரிவிலும் அவர் தங்கப்பதக்கம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக நேற்று மலேசியாவின் மூன்றாவது தங்கப் பதக்கத்தை 60 கிலோகிரேமிற்கும் குறைந்த பிரிவில் H . Sureeya Sankar வென்றார். அவர் இந்தோனேசியாவின் Ari Saputraவை இறுதிச் சுற்றில் 13க்கு 5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். கடந்த ஆண்டு Hanoi சீ போட்டியில் 67 கிலோகிரேமிற்கும் குறைந்த பிரிவில் அவர் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!