
கோலாலம்பூர், ஏப் 27 – அடுத்த மாதம் கம்போடியாவில் நடைபெறவிருக்கும் சீ போட்டியில் 50க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை பெறும் இலக்கை மலேசிய விளையாட்டாளர்கள் கொண்டுள்ளனர். இவ்வட்டாரத்தின் இதர நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் கடுமையான சவாலலை எதிர்நோக்கிய விடா முயற்சியுடன் கூடிய போராட்ட உணர்வு மற்றும் முழுமூச்சுடன் போராடினால் 50க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை பெறும் மலேசியாவின் கனவு கைகூடும் என சீ போட்டிக்கான மலேசிய குழுவின் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். சீ போட்டிக்கு செல்லும் மலேசிய குழுவுக்கு இம்மாதம் 30 ஆம் தேதி புத்ரா ஜெயாவில் நடைபெறும் நிகழ்வில் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் Hannah Yeoh தேசிய கொடியை ஒப்படைப்பார்.