Latestமலேசியா

சுகாதாரப் பணியாளர்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் ; டான் ஶ்ரீ ஹனிஃபா

கோலாலம்பூர், ஏப்ரல் 2 – நாட்டில், மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, சுகாதார அமைச்சு உடனடியாக குறுகிய கால தீர்வுகளை எடுக்குமாறு மேலவை உறுப்பினர் செனட்டர் டான் ஶ்ரீ ஹனிஃபா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதோடு, மருத்துவமனைகளில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வேலை வாய்ப்புகள் குறித்து வினவிய அவர், பயிற்சி மருத்துவர்கள் நிரந்தர மருத்துவர்களாக பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு எத்தனை காலம் எடுத்துக் கொள்ளப்படுவதாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, மருத்துவராக பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் சுகாதார பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கூடிய சில பரிந்துரைகளையும் அவர் முன் வைத்தார்.

மருத்துவமனைகளில் பேரளவில் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படுவதோடு, மருத்துவர்கள் , ஒப்பந்த மருத்துவர்கள் ஆகியோருக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வரவு செலவுத் திட்டத்தில், சுகாதார துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

2021-இல் MMA- மலேசிய மருத்துவ சங்கம் மேற்கொண்ட ஆய்வில், 50 விழுக்காடு பயிற்சி மருத்துவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், அவர்களில் 30 விழுக்காட்டினர் அதிக சோர்வுக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தி இருப்பதாகவும் காட்டுவதாக , டான் ஶ்ரீ ஹனிஃபா சுட்டிக் காட்டினார்.

அதோடு, 2020-இல் வெளியிடப்பட்ட BMC Public Heath எனப்படும் மருத்துவ அறிக்கையில், நாட்டின் 65. 7 விழுக்காட்டு சுகாதாரப் பணியாளர்கள் அதிகமாக சோர்வடைந்திருப்பதாகவும், அவர்களில் 54. 6 விழுக்காட்டினர் மன அழுத்தத்துக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, நாட்டிலுள்ள சுகாதாரப் பணியாளர்கள் , அதிக வேலை அழுத்தம், குறைவான ஓய்வு, பொது மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு ஆகிய பிரச்சனைகளை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!