
சுகாதார அமைச்சில், நிரந்தர வேலைக்கான நான்காயிரத்து 914 காலி இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
அதில் நான்காயிரத்து 263 இடங்கள் மருத்துவ அதிகாரிகளுக்கானவை. எஞ்சிய 335 இடங்கள் பல் மருத்துவர்களுக்காகவும், 316 இடங்கள் மருந்தக அதிகாரிகளுக்காகவும் திறக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.
இன்று தொடங்கி இம்மாதம் 21-ஆம் தேதி வரையில் அதற்காக விண்ணப்பம் செய்யலாம். அதனால், தகுதியுள்ளவர்கள், முழு விவரங்களுடன் உடனடியாக விண்ணப்பம் செய்யுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.