Latestமலேசியாவிளையாட்டு

சுக்மா கபடிப் போட்டி சிலாங்கூர் – கோலாலம்பூர் அணிகள் அதிரடி

கோலாலம்பூர், செப் 21 – சுக்மா கபடி போட்டியில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் அணிகள் அதிரடி படைத்தன. 9 குழுக்கள் கலந்துகொண்ட சுக்மா கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சிலாங்கூர் குழு முதல் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. கோலாலம்பூர் குழு வெள்ளிப் பதக்கத்தை வென்ற வேளையில் சரவா அணி வெண்கலப் பதக்கத்தை பெற்றது.

மகளிர் பிரிவுக்கான போட்டியில் கோலாலம்பூர் குழு தங்கப் பதக்கத்தை வென்றது. இப்பிரிவில் சிலாங்கூர் அணி வெள்ளிப் பதக்கத்தையும் சரவா குழு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற குழுவிற்கு இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஜனா சந்திரன். மலேசிய கபடி சங்கத் தலைவர் சதாசிவம், அதன் செயலாளர் பீட்டர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இம்முறை சுக்மா போட்டியில் கண்காட்சி விளையாட்டாக கபடி இடம்பெற்றதால் வெற்றி பெற்ற குழுவின் விளையாட்டாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்ட போதிலும் சுக்மா போட்டியின் பதக்க பட்டியலில் அவை சேர்த்துக்கொள்ளப்படவில்லை . அடுத்த சுக்மா போட்டியில் பதக்க பட்டியலுக்கான விளையாட்டுக்களில் கபடியும் சேர்த்துக்கொள்ளப்படும் என மலேசிய கபடிச் சங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!