
உத்திரப் பிரதேசம், ஆகஸ்ட் 9 – உத்திரப் பிரதேசம் மாநிலம் ஹாபூர் நகரில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் வலுக்கட்டாயமாக காரில் இருந்து கிளம்பிய சிலர், மனிதாபிமானமற்ற முறையில் சுங்கச்சாவடி ஊழியர் மீது காரை மோதிவிட்டு சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், காரில் இருந்த சில இளைஞர்கள் சுங்கச்சாவடியில் இருந்து கட்டணம் செலுத்தாமல் வெளியேறியபோது, சுங்கச்சாவடி ஊழியர் காரை நிறுத்த முயன்றதும்,
ஆனால் காரை ஓட்டி வந்தவர், சுங்கச்சாவடிக்கு வாகனத்தை கொண்டு வந்து ஊழியரை நசுக்க முயன்றதும் பதிவாகி இருந்தது.
கார் மோதியதில் சுங்கச்சாவடி ஊழியர் பலத்த காயம் அடைந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பில்குவா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.