சுங்கை சிப்புட், பிப் 14 – சுங்கை சிப்புட்டில் நேற்றிரவு பெய்த கடுமையான மழையினால் Kanthan வட்டாரத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் குறைந்தது 15 வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. Khantan வட்டாரத்திலுள்ள கோயிலுக்கு அருகே 0.6 மீட்டர் உயர்த்திற்கு வெள்ளம் ஏற்பட்டதாக தீயணைப்பு படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் வாகனங்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அந்த வெள்ளத்தின்போது மக்கள் எவரும் வெளியேற்றப்படவில்லை.
Related Articles
Check Also
Close
-
சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி15 hours ago