Latestமலேசியா

தென்கிழக்கு ஆசியாவில், தனித்து வாழ்பவர்கள் அதிகம் உள்ள மூன்றாவது நாடு மலேசியா

கோலாலம்பூர், பிப்ரவரி 16 – தென்கிழக்காசியாவில், திருமணம் செய்துக் கொள்ளாமல் தனித்து வாழ்பவர்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில், மலேசியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

“SeaAsia Stats” கணக்கெடுப்பின் வாயிலாக, மலேசியாவில் மொத்தம் 44.68 விழுக்காட்டினர் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் தனித்து வாழ்வது தெரிய வந்துள்ளது.

திருமணம் செய்துக் கொள்ளாதவர்களுடன், மணவிலக்கு பெற்றவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள், அல்லது விலகி வாழ்பவர்கள் ஆகியோரும் அந்த எண்ணிக்கையில் அடங்குவர்.

தென்கிழக்கு ஆசியாவிலுள்ள 11 நாடுகளில் அந்த கணகெடுப்பு மேற்கொள்ளப்பட்ட வேளை ; அதில் பிலிப்பீன்சும், புருனையும் முறையே முதல் இரு இடங்களை வகிக்கின்றன.

கம்போடியா, மியன்மார், தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், லாவுஸ், வியட்நாம், தீமோர் லெஸ்தே ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!