சுங்கை சிப்புட், அக்டோபர் 2 – சுங்கை சிப்புட் ம.இ.கா ஸ்ரீ தாமான் கிளை மற்றும் இந்தியர் இயக்கம், தலைவருமான சின்னராஜூ அவர்களின் ஏற்பாட்டில் ‘புதினமும், புதியத்தலைமுறையும்’ எனும் நிகழ்ச்சி செவ்வனே நடைபெற்றது.
மக்களிடையே தமிழ் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில், கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்தியாவிலிருந்து சிறந்த எழுத்தாளரான எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு வருகையளித்து, பேருரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ம.இ.கா கிளைத் தலைவர்கள், காவல் துறை , அரசு மற்றும் அரசு சாரா இயக்கத்தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.
இதில் முத்தாய்ப்பாக, அண்மையில் மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேச்சுபோட்டியில் தேசிய ரீதியில் முதல் நிலையில் வென்ற, சுங்கை சிப்புட்டைச் சேர்த்த 11 வயது மாணவி சுபநாகஸ்ரீ அவர்களுக்கும், சிறப்பு விருத்தினரால் சிறப்பிக்கப்பட்டார்.