குவாலா கங்சார், செப்டம்பர்-19, பேராக், சுங்கை சிப்புட்டில் போலி ஹலால் சான்றிதழைப் பயன்படுத்தியதாக நம்பப்படும், லக்சா (laksa) மற்றும் குவேய்தியாவ் (kuetiau) தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
அத்தொழிற்சாலைத் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் பொட்டலங்களில் ஹலால் முத்திரை காணப்பட்டாலும், மலேசிய ஹலால் சான்றிதழை அதன் நிர்வாகத்தால் காட்ட முடியவில்லை.
இதையடுத்து 3,020 உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) பேராக் கிளையின் இயக்குநர் Datuk Kamalludin Ismail தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 5,828 ரிங்கிட் 50 சென் என்றார் அவர்.
போலி ஹலால் சான்றிதழ் பயன்பாடு தவிர்த்து, 1972-ஆம் ஆண்டு எடை மற்றும் அளவு சட்ட மீறலும் கண்டறியப்பட்டது.
அதற்கு தனியாக 1,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.