சுங்கை சிப்புட், அக்டோபர் 3 – எதிர்வரும் அக்டோபர் 6ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக சுங்கை சிப்புட், ஈவுட் தமிழ்ப் பள்ளியைத் திறந்து வைக்கிறார்.
முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களால் அறிவிக்கப்பட்ட 6 புதிய தமிழ்ப்பள்ளிகளில் இறுதியாகக் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி சுங்கை சிப்புட், ஈவூட் தமிழ்ப் பள்ளியாகும்.
இந்நிலையில், மாணவர்கள் கல்வி பயில்வதற்காகக் கடந்த மார்ச் மாதம் திறந்து விடப்பட்ட இப்பள்ளி, இப்போது பிரதமரால் அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா காணவிருக்கிறது எனப் பள்ளி வாரியத் தலைவர் தியாகராஜன் தெரிவித்தார்.
இப்பள்ளி சகல வசதிகளை உள்ளடக்கிப் பேரா மாநிலத்திலேயே மிகப் பெரிய பள்ளியாக அமையப் பெற்றுள்ளது.
மிகவும் பிரமாண்டமான முறையில் திறப்பு விழா காணவுள்ள இவ்விழாவிற்கு, பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.