
சுங்கை சிப்புட் , ஜன 24 – தமிழ்ப் புத்தாண்டாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுங்கை சிப்புட்டைச் சார்ந்த ம.இ.கா ஸ்ரீ தாமான் கிளையின் பொங்கல் விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தமிழ்ப்பள்ளி மற்றும் பாலர்ப்பள்ளி மாணவருக்கான வண்ணம் தீட்டும் போட்டி, கோலம் போடும் போட்டி, சரம் தொடுக்கும் போட்டி, கரும்புக் கடிக்கும் போட்டியென இப்பொங்கல் விழா களைக்கட்டியது.
ம.இ.காவின் தேசியத்தலைவர் தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் ஆதரவில் இந்நிகழ்வுச் சிறப்பாக நடைபெற்றது என ம.இ.கா ஸ்ரீ தாமான் கிளையின் தலைவர் வீ.சின்னராஜூ கூறியுள்ளார்.