சுங்கை பட்டாணி, நவம்பர்-17 – கெடா, சுங்கை பட்டாணியில் தனது ஆணுறுப்பில் 2 மோதிரங்கள் மாட்டிக் கொண்டு வலியால் துடித்த ஆடவரைக் காப்பாற்ற, வேறு வழியின்றி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்குத் தீயணைப்பு-மீட்புப் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தகவல் கிடைத்து அமான் ஜெயா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் சம்பவ இடம் சென்றடைந்தனர்.
மோதிரத்தை வெட்ட பயன்படுத்தப்படும் சிறப்புக் கருவியைக் கொண்டு, 38 வயது அவ்வாடவரின் ஆணுறுப்பில் மாட்டிக் கொண்ட மோதிரங்கள் முழுவதுமாக வெட்டி எடுக்கப்பட்டன.
காயம் மோசமாகாமலிருக்க மிகவும் கவனமாக அப்பணி மேற்கொள்ளப்பட்டது.
என்ற போதிலும் நீண்ட நேரமாக மோதிரங்கள் இறுக்கமாக சிக்கிக் கொண்டதில், அவரின் ஆணுறுப்பு காயமடைந்திருந்தது.
அதற்காக மருத்துவமனையில் அவருக்கு மேல் சிகிச்சையளிக்கப்பட்டது.