Latest
சுங்கை பட்டாணியில் கடும் மழை- மரங்கள் விழுந்ததில் வீடுகள் பாதிப்பு
சுங்கைப் பட்டாணி, பிப் 2 – தொடர்சியாக கடும் வறட்சியில் இருந்த சுங்கைப் பட்டாணி பண்டார் புத்ரி ஜெயாவில் இன்று கடுமையான காற்றுடன் பலத்த மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்ததில் வீடுகள், கடைகள் மற்றும் அங்காடிக் கடைகளும் சேதம் அடைந்தன. எனினும் அந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லையென கோலா மூடா வட்டாரத்திற்கான பொது தற்காப்பு படையின் அதிகாரி அஸார் அகமட் தெரிவித்தார்.
கடுமையாக காற்றினால் பல இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கூரைகளும் பறந்து விழுந்தன. சுங்கை பட்டாணி நகரான்மைக் கழகத்தின் பணியாளர்களின் ஒத்துழைப்போடு கீழே விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.