சுங்கை பட்டாணி, ஏப்ரல்-10, கெடா, சுங்கை பட்டாணியில் அபாயகரமாக வானவெடிகளும், பட்டாசு- மத்தாப்புகளும் வெடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.
கைதானவர்கள், வானவெடிகளுக்குச் சொந்தக்காரரான 27 வயது ஆடவர், மற்றும் அதனைக் கொளுத்திய 24 வயது இளைஞன் என குவாலா மூடா போலீஸ் தலைவர் Zaidy Che Hassan தெரிவித்தார்.
டத்தாரான் ஜாம் பெசார் சதுக்கத்தில் ஏற்பட்ட அவ்வெடிப்புக்கு, Happy Bomb வானவெடியே மூலக்காரணமாக இருந்திருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த வானவெடியின் எறிகணைகள் அருகில் உள்ள மற்ற பட்டாசுகளை நோக்கி பாய்ந்து, அவற்றையும் பற்றவைத்ததால் பெரிய வெடிப்பு ஏற்பட்டு அந்த இடமே கலவரமானதாக Zaidy சொன்னார்.
எனினும், தீயணைப்பு மீட்புத் துறை விரைந்து செயல்பட்டதில், சம்பவ இடத்தில் தீயோ, அல்லது யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்றார் அவர்.
நேற்று அதிகாலை அங்கு திடீரென பட்டாசுகளும் மத்தாப்புகளும் வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பீதியில் அங்காடி வியாபாரிகளும் பொது மக்களும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தலைத் தெறிக்க ஓடுவது வைரலான காணொலியில் தெரிந்தது.